பக்கம்:கவி பாடலாம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கவி பாடலாம்

இந்தப் பாடலில் எல்லாம் வெண்சீராக-காய்ச்சீராக

வந்திருப்பதைக் காண்க. காய்முன் நேரும், காய் முன்

நிரையும் இதில் விரவி வந்துள்ளன.

கண்கன் திருவடியே கைதொழுது பூப்புனைந்து நண்ணும் அவன்புகழை நாடொறும் கேட்டுவந்தோர் திண்ண முடையநெஞ்சும் சீரும் சிறப்புமடைந் தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா யிலகுவரே. இந்தப் பாடலில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்துள்ளன. காய்முன் நேரும், காய்முன் நிரையும் வந்துள்ளன. இருப்பிடமா-யிலகுவரே. இங்கே காய்முன் நிரை வந்தது காண்க. நாடொறும் என்னும் விளச்சீர் முன் நேர் வந்தது. விளமுன் நிரை வருவதும் உண்டு. ஆனால் இதில் உள்ள மாச்சீர்கள் எல்லாவற்றுக்கும் முன் நிரை வந் திருப்பது காண்க. கண்ணன் திருவடியே நண்ணும் அவன் புகழை-திண்ண முடையநெஞ்சும்-சீரும் சிறப்புமடைந்தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா என்பவற்றைக்காண்க.

“தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் குலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பீ என்னும் திருவாசகப் பாடலும் தரவு கொச்சகக் கலிப்பாவே. இதில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும், வந்தன. மாச்சீர் வந்த இடங்களிலெல்லாம் அதன் முன் நிரையே வந்திருப் பதைக் கவனிக்க வேண்டும். தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும்-நீறும் பசுஞ்சாந்தும்-தொக்க வளையு முடைத் தொன்மை-நோக்கிக் குளிர்ந்துதாய் என்பவற்றைக் காண்க தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளுக்கு அதிக மாக வருவதையும், வேறு வகையில் வருவதையும் பின்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/105&oldid=655692" இலிருந்து மீள்விக்கப்பட்டது