பக்கம்:கவி பாடலாம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பிலக்கணம் 107

பொருளிலக்கணத்தின் பகுதியாக இருந்த யாப்பிலக் கணம் விரிந்து, நாளடைவில் தனியே இலக்கண நூல் அமைக்கும்படி ஆயிற்று. யாப்பருங்கலம் என்னும் நூலின் உரையில் அவ்வுரையாசிரியர் பல பல யாப்பிலக்கண நூல்களை எடுத்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றைப் பார்க்கும் போது, பழங்காலத்தில் யாப்பிலக்கண ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றது என்று தெரியக் கிடக்கிறது.

தனிச் செய்யுளையன்றி நூல்களின் இலக்கணத்தைச் சொல்லும் இலக்கணங்கள் தனியே உண்டாயின. அவற்றைப் பாட்டியல் என்று சொல்வார்கள். பன்னிரு பாட்டியல் என்பது பழைய பாட்டியல் நூல்.

மாபுராணம், பூதபுராணம் என்று இரண்டு பழைய யாப்பிலக்கண நூல்கள் இருந்தன. அவை மிகவும் விரிவாக இருந்தன என்பதை, பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம் பூத புராணம் என்பன சில் வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின் (தொல். மரபியல்,97,உரை) என்று பேராசிரியர் எழுயதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இலக்கண நூலுக்குப் புராணம் என்ற பெயர் அமைந்தது விநோதமாக இருக்கிறது. அவிநயம் என்பது ஐந்து இலக்கணத்தையும் உடைய பழைய நூல். அதில் யாப்பதிகாரம் விரிவாக இருந்தது.

தொல்காப்பியத்தை அடியொற்றியும் பல விரிந்த

பகுதிகளை இணைத்தும் பல்காப்பியர் என்னும் புலவர் ஒரு செய்யுளிலக்கண நூல் செய்தார். அது பல்காப்பியம் என்னும் பெயரோடு வழங்கியது. அப்படியே பல்காயனார் என்பவர் பல்காயம் என்ற யாப்பிலக்கண நூலை இயற்றினார்.

காக்கைபாடினியார் என்னும் பெண்புலவர் ஒரு யாப்பிலக்கண நூல் செய்தார். அதற்குக் காக்கை பாடினியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/108&oldid=655695" இலிருந்து மீள்விக்கப்பட்டது