பக்கம்:கவி பாடலாம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவி பாடலாம்

என்று பெயர். அவரை, “கற்றார் மதிக்கும் கலைக் காக்கை பாடினியார்’ என்று ஒரு பாட்டிலே புலவர் ஒருவர் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். சிறு காக்கை பாடினியம் என்று பிற்காலத்தில் செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்தது. அதை இயற்றியவர் மற்றொரு காக்கை பாடினியார்.

இவற்றையன்றிக் கையனார் யாப்பு, நத்தத்தர் யாப்பு, சங்கயாப்பு, மயேச்சுவரர் யாப்பு என்ற பெயரோடு வழங்கிய நூல்கள் யாவும் யாப்பிலக்கணத்தைத் தனியே வரையறுத்துச் சொல்லுபவை. பரிமாணனார், பனம்பாரனார், நல்லாறனார், வாய்ப்பியனார், கடிய நன்னியார், பாடலனார் என்னும் ஆசிரியர்களும் செய்யுளின் இலக்கணத்தைச் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பம்மம், செய்யுளியல், யாப்பியல், கவிமயக்கறை பெரிய முப்பழம், தக்காணியம் என்னும் பெயருள்ள நூல்களிலும் செய்யு விலக்கணங்கள் சொல்லப்பட்டன என்று உரைகளில் வரும் குறிப்புக்களால் தெரிய வருகின்றது.

தமிழ் நெறி விளக்கம் என்ற நூலில் யாப்பிலக்கணம் இருந்திருக்கக் கூடும் என்று அதன் பதிப்பாசிரியராகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக் கிறார்கள்.

இப்போது நமக்கு உருப்படியாகக் கிடைக்கும் பழைய செய்யுள் இலக்கணம் தொல்காப்பியச் செய்யுளியல் ஒன்று தான். எழுத்து முதலிய இலக்கணங்கள் முழுவதை யும் வரையறுக்கும் பிற்கால நூல்களில் யாப்பின் இலக்கண மும் அமைந்திருக்கிறது. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல், முத்து வீரியம் என்பவற்றில் செய்யுளிலக்கணப் பகுதி இருப்பதைக் காணலாம்.

புலவர்கள் யாப்பிலக்கணத்துக்கு மேல்வரிச் சட்டமாகக் கொண்டு பாராட்டும் நூல் யாப்பருங்கலக் காரிகை. அதனை இயற்றியவர் முதற் குலோத்துங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/109&oldid=655696" இலிருந்து மீள்விக்கப்பட்டது