பக்கம்:கவி பாடலாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த கவிஞரான கி.வா.ஜ. கவிதையின் எல்லா அம்சங்களையும் திறமுடன் விளக்கி யுள்ளார்.

நிறைந்த அனுபவம் உடைய ஆசிரியர் சிறந்த சான்றுகள் மூலம் வாசகர் உள்ளம் கொள்ளுமாறு விஷயங்களை விளக்கியுள்ளார். பல்லாண்டுகளாகத் தமிழ் நலம் உணர்ந்து அனுபவிக்கும் ஆசிரியர் கவிதையின் இலக்கணங்களை உறுதியுடன் வரையறை செய்கிறார். தமிழ்க் கவிதையாப்பு வளர்ந்த முறை அழகாக விளக்கப்பட்டுள்ளது. நன்றாகக் கவிபாடவும் யாப்பின் இயல்பறிந்து தமிழ்ச் சுவை துய்க்கவும் இந்நூல் துணை செய்யும்.

ஆசிரியர் கி.வா.ஜ. வின் மணிவிழா நாளில் இந்நூல் வெளிவருவதில் கழிபே ருவகை கொள்கிறோம். இதனை வெளியிடு வதில் பெருமை கொள்கிறோம். இவ் அரிய நூலை வெளியிட இசைவு தந்த ஆசிரியர் அவர்கட்கு எம் உளங் கனிந்த நன்றி. நூல் அழகுற அமையத் துணை செய்த அண்ணா மலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ச.மெய்யப்பன் எம்.ஏ. அவர்கட்கும் என் நன்றி உரியது.

ச.முத்துப்பழநியப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/11&oldid=655697" இலிருந்து மீள்விக்கப்பட்டது