பக்கம்:கவி பாடலாம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கவி பாடலாம்

வேண்டுமென்று தோன்றுகிறது. அந்த முறைப்படி நூல்களை இயற்றினார் அமுதசாகரர். வெண்பா முதலிய வற்றுக்குச் செப்பலோசை முதலிய ஓசைகள் உண்டு என்று இலக்கணம் கூறினாலும், அவற்றைத் தளையினாலும் அடியினாலும் தெரிந்து கொள்ளும்படி யாப்பருங் கலக்காரிகை வழி காட்டுகிறது. தொல்காப்பியரின் வழியைப் பின்பற்றினவர்கள், ஓசையை அந்தத் துறையில் பழக்க முடையவர்கள் கேட்ட மாத்திரத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுவர். பா என்பது சேட்புலத்தில் இருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை’ (தொல்.செய்யுளியல், 1,உரை) என்பர் பேராசிரியர்.

எழுத்தை எண்ணி அடி வகுக்கும் முறையைக் கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகைச் செய்யுட்களில் மட்டும் இப்போது காண்கிறோம். இவற்றுக்கு இலக்கணம் யாப்பருங்கலக் காரிகையில் இல்லை; அதன் உரையாசிரியர் உரையிடையே வகுத்துரைக்கிறார். யாப்பருங்கலக் காரிகை யென்னும் நூலே கட்டளைக் கலித்துறையால் ஆனது. அதற்கு அந்நூலில் இலக்கணம் இல்லாதது வியப்பாகத் தோன்றுகிறது அல்லவா? - -

இப்போது காரிகையே புலவர்களிடையே பெரு வழக்காக இருக்கிறது. தொல்காப்பியச் செய்யுளியல் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் ஆசிரியர்களுடைய உரையுடன் இருந்தும் அதனை ஆராய்கிறவர்கள் இல்லை. எளிதாக மனனம் பண்ணும் வகையில் சுருக்கமாய் அமைந்திருப்பதால் யாப்பருங்கலக் காரிகை புலவர் உலகில் இன்று விளக்கத்துடன் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/111&oldid=655699" இலிருந்து மீள்விக்கப்பட்டது