பக்கம்:கவி பாடலாம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பிலக்கணம்

நிலவுகிறது. காரிகை என்பது கட்டளைக் கலித்துறைக்குரிய பெயர். ஆனால் காரிகையென்றவுடன் யாப்பருங்கலக் காரிகையே தமிழ் படித்தவர்களின் நினைவுக்கு வரும். யாப்பருங்கலக் காரிகை என்ற நீண்ட பெயர் சுருங்கிக் காரிகை என்று சொன்ன அளவிலே இன்ன நூல் என்று தெரிந்து கொள்ளும்படி அந்நூலின் பெருமை இருக்கிறது.

இந்த நூலை இயற்றியதற்காக அமுதசாகரருக்குக் குளத்தூர் என்ற ஊரை அரசன் வழங்கினான். அதற்குக் காரிகைக் குளத்துர் என்ற பெயர் அமைந்தது.

பழங்காலத்தில் நான்கு வகைப் பாக்களோடு பரிபாடல் என்ற பாவும் புலவர்களால் பாடப் பெற்றது. - அகத்துறைக்குச் சிறந்தவை கலிப்பாவும் பரிபாடலும் என்று தொல்காப்பியர் சொல்கிறார். ஆதலின் அவ்வகைட் பாடல்கள் தொல்காப்பியர்காலத்திலும் அவருக்கு முன்பும் மிகுதியாக உண்டாயின என்று தோன்றுகிறது. நாளடைவில் பரிபாடலைப் பாடுபவர் குறைந்தனர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்று பரிபாடல் என்ற பெயரோடே இருக்கிறது கடைச் சங்க காலத்தில் ஆசிரியப் பாக்களே மிகுதியாக இருந்தன. வெண்பாக்களும் உண்டு, ஆனால் தேவாரத திருமுறைகளும் திவ்யப் பிரபந்தங்களும் எழுந்த பிறகு பாவினங்களே மிகுதியாகத் தோன்றின. அவற்றிலும் விருத்தங்கள் மல்கின. சீவகசிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்கள் முழுவதும் விருத்தங்களால் அமைந்தன. விருத்த மென்னும் ஒண்பாவுக் குயர் கம்பன் தோன்றிப் பதினாயிரம் விருத்தங்களால் இராமாயணத்தைப் பாடினான். நான்கு சீர்களால் வரும் கொச்சகக் கலிப்பாவும், ஐந்து சீர்களால் வரும் கலித்துறையும் விருத்தங்களின் வகைகளைப் போலவே அமைந்தன. ஆகவே விருத்தங்களே பிற்காலக் கவியுலகில் வீறு நடை போட்டன என்று சொல்லலாம். ஒரு புலவர் விருத்தப் பாவியல் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/112&oldid=655700" இலிருந்து மீள்விக்கப்பட்டது