பக்கம்:கவி பாடலாம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 4 கவி பாடலாம்

எழுத்தைப்பற்றிய இலக்கணத்தை முதலில் யாப் பிலக்கணம் கூறுகிறது. அதைப் பற்றி நாம் எழுத்திலக் கணத்திலும் தெரிந்து கொள்ளலாம். குறில், நெடில், உயிர், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஆய்தம், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அளபெடை என்னும் பதின்மூன்றும் எழுத்தின் வகை.

அசைகளின் இலக்கணத்தை முன்பே பார்த்தோம். அசைகள் நேரசை, நிரையசை என்று இரண்டு வகைப்படும் என்பதும், தனிக் குறில்-தனி நெடில்-ஒற்றடுத்த குறில்ஒற்றடுத்த நெடில் என்னும் நான்கும் நேரசைகள் என்பதும், இரண்டு குறில்-குறிலையடுத்த நெடில்-இரு குறிலும் ஒற்றும்-குறில் நெடில் ஒற்று ஆகியவை நிரையசைகள் என்பதும் முன்பே நாம் அறிந்தவை. இவற்றுக்கு உதாரணமாக ஆ-ழி-வெள்-வேல்; வெறி-சுறா-நிறம். விளாம் என்பவற்றை யாப்பருங் கலக் காரிகை எடுத்துக் காட்டுகிறது. ‘குற்றெழுத்துத் தனியே வரினும், நெட் டெழுத்துத் தனியே வரினும், குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்து வரினும் நேரசையாம். குறில் இணைந்து வரினும், குறில் நெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து ஒற்றடுத்து வரினும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் நிரையசையாம்’ என்பது காரிகை உரை. .

அசையின் இலக்கணத்தைச் சொல்லும் சூத்திரம் வருமாறு:- . .

‘குறிலே நெடிலே குறில்இணை ஏனைக் குறில்நெடிலே

நெறியே வரினும், நிரைந்துஒற்றடுப்பினும் நேர்நிரை என்று அறி, வேய் புரையும்மென் தோளி; உதாரணம்: ஆழிவெள்வேல் வெறியேய் சுறாநிறம்விண்தோய்விளமென்றுவேண்டுவரே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/115&oldid=655703" இலிருந்து மீள்விக்கப்பட்டது