பக்கம்:கவி பாடலாம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 . கவி பாடலாம்

வெண்சீர், ஆசிரியச் சீர், வஞ்சிச் சீர் என்று ஒவ்வொரு வகைப் பாவின் பெயரோடும் சீர் இருப்பது போலக் கலிச் சீர் என்று ஒன்று இல்லை. t

சீர்களைக் குறிப்பிடும் போது அவற்றில் வரும் ஈற்றைச் சுட்டிப் பெயர் சொல்வது வழக்கம். மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர், பூச்சீர், நிழற்சீர் என்று குறிப்பிடுவார்கள்.

2. தளை

முன்பு ஏழு தளைகளின் பெயரை மாத்திரம் சொல்லி வெண்டளையின் இலக்கணத்தை விரிவாகச் சொன்னேன். தளை பார்க்கும் வழக்கம் வெண்பாவிலும் கட்டளைக் கலித் துறையிலும் மட்டும் இருக்கிறதென்பதையும் முன்பு கூறினேன். மற்றத் தளைகளையும் இனித் தெரிந்து கொள்ளலாம்.

1. வெண்டளை இரண்டு வகைப்படும்: இயற்சர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை. மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வ்ருவன வெண்டளை.

2. ஆசிரியத்தளை : நேரொன் றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை என்று இரண்டு வகைப்படும். நின்ற சீர் ஆசிரியச் சீர் அல்லது இயற்சீராக இருக்க, வரும் சீரின் முதலசையோடு ஒத்து நிற்பது ஆசிரியத் தளை. மாமுன் நேர் வந்தால் நேரொன் றாசிரியத்தளை, விளமுன் நிரை வந்தால் நிரையொன் றாசிரியத்தளை, வருகின்ற சீர் எதுவாக இருந்தாலும் அதைக் கவனிக்க வேண்டியதில்லை. அதன் முதல் அசையை மாத்திரம் பார்த்தால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/117&oldid=655705" இலிருந்து மீள்விக்கப்பட்டது