பக்கம்:கவி பாடலாம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கவி பாடலாம்

யும் ஆசிரியத்தளையும் அமையும். அவை தனித்தனி இவ்விரண்டு வகை. -

மாமுன் நிரை - விளமுன் நேர் இவை இயற்சீர் வெண்டளை

மாமுன் நேர் விளமுன் நிரை இவை ஆசிரியத் தளை.

3. கலித்தளை. காய்ச்சீராகிய வெண்சீர் நிற்க, வரும் சீரின் முதல் நிரையாக வரின் கலித்தளையாகும். இது ஒரே

a f .

‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி.” இந்த அடியில் நான்கு சீர்களும் காய்ச்சீர்கள். காய் முன் நிரை வந்தமையால் கலித்தளையாயிற்று. செல்வப்போர்க்-தேமாங்காய், கதக்கண்ணன்-நிரை நேர்நேர் என்பதைக் காண்க.

4. வஞ்சித்தளை : கனிச் சீருக்கு வஞ்சிச் சீர் என்று பெயர். கணிச்சீர் நிற்க, வரும் அசை நிரையானால் ஒன்றிய வஞ்சித்தளை நேர்ஆனால் ஒன்றாத வஞ்சித் தளை.

“மந்தநிலம் மருங்கசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர்மிசை.”

இந்த அடிகளில் முதல் இரண்டில் தேமாங்கனிகருவிளங்காய் என்ற வாய்பாட்டுச்சீர்கள் வந்தன. கனிமுன் நிரை வந்தமையின் இது ஒன்றிய வஞ்சித்தளை. மூன்றாவது அடியில் தேமாங்கனி-கூவிளங்கனி என்ற வாய்பாட்டுச் சீர்களில் கனிமுன் நேர் வந்தது. இது ஒன்றாத வஞ்சித்தளை.

ஆகவே, மொத்தம் ஏழு தளைகள் இருத்தலைப் பார்த்தோம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/119&oldid=655707" இலிருந்து மீள்விக்கப்பட்டது