இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அடிகள் 3.21.
குறளடி வரும் இடங்கள்:
1.
இணைக்குறளாசிரியப்பாவில் இடையிடையே வரும். கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில் வரும். குறளடி வஞ்சிப்பாவில் வரும். வஞ்சித் தாழிசையில் வரும். வஞ்சித் துறையில் வரும்.
சிந்தடி வரும் இடங்கள்:
1.
I
Q.
எல்லா வெண்பாக்களிலும் ஈற்றடியாக வரும். நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடியாக வரும். இணைக்குறளாசிரியப்பாவின் இடையே வரும். கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில் வரும். சிந்தடி வஞ்சிப்பாவில் வரும். வெண்டாழிசையின் இறுதி அடியாக வரும். வெண்டுறையில் இடையே வரும். ஆசிரியத் துறையின் இடையே வரும். கலித்தாழிசையின் இடையே வரும். வஞ்சி விருத்தத்தில் வரும்
நேரடி வரும் இடங்கள்:
1.
வெண்பாக்களில் ஈற்றடி ஒழிந்த மற்ற அடிகள் நேரடியாக வரும்.
நிலைமண்டில ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் நேரடியாக வரும். - .
நேரிசை ஆசிரியப்பா ஈற்றயலடி ஒழிந்த அடிகள்.