பக்கம்:கவி பாடலாம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை எதுகைகளின் வகை 123

ஆசிரியத் தாழிசையில் வரும். ஆசிரியத் துறையில் வரும்.

ஆசிரிய விருத்தம் யாவும் கழிநெடிலடியாய் வருவனவே.

அதிகமான சீர்களை உடைய அடிகளை ஆசிரிய விருத்தத்தில் காணலாம். -

மிகவும் குறைந்த அடிகளையுடைய பாட்டுக் குறள் வெண்பா; அது இரண்டடிகளை உடையது. அகவற்பா மூன்றடிகளுக்குக் குறைவாக வராது. கலிப்பா நான்கடியிற் குறைந்து வராது. வஞ்சிப்பாவுக்கு மூன்றடியே இழிந்த எல்லை; சிறுபான்மை இரண்டடிகளாலும் வரும்.

வெண்பாவில் பஃறொடை வெண்பா 12 அடி வரையில் வரும். கலிவெண்பா எத்தனை அடிகளாலும் வரலாம். ஆசிரியப்பாவின் அடிகளுக்கு மேல் எல்லை இல்லை. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எத்தனை அடி களாலும் வரலாம். ‘உன்ரப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை” என்று பாட்டுக்களின் மேல் எல்லையைப் பற்றி யாப்பருங்கலக் காரிகை கூறுகிறது.

4. மோனை எதுகைகளின் வகை

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவை செய்யுளின் உறுப்புகள். இவை யாவும் காரணப் பெயர்கள். எழுதப்படுவதனால் எழுத்து என்ற பெயர் உண்டாயிற்று. அசைத்தல் என்பதற்குக் கட்டுதல் என்பது பொருள். எழுத்துக்களை இணைத்துக் கட்டி நடக்கச் செய்வதனால் அசை என்ற பெயர் வந்தது. சீர் என்பது தாளத்துக்குப் பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/124&oldid=655716" இலிருந்து மீள்விக்கப்பட்டது