பக்கம்:கவி பாடலாம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவி பாடலாம்

வரையறையான ஓசையே (Rhythm) தாளம் ஆகும். செய்யுட் களில் அந்த வரையறை அமையும்படி செய்வதனால் சீர் என்ற பெயர் வந்தது.

தளை என்றால் பிணைப்பது என்று பொருள்; விலங்குக்கும் பெயர். அது சீரையும் சீரையும் பிணைப்ப தனால் தளை என்றார்கள். தளை என்ற சொல் தள் என்ற பகுதியிலிருந்து வந்தது. தளையமைந்து நிற்றலைத் தட்டல் என்று சொல்வது பழைய மரபு. வெண்டளை தட்டு நிற்கும் என்றால் வெண்டளை அமைந்து நிற்கும் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்போது புலவர்கள் பேச்சில், தளை தட்டுகிறது என்றால், தளை தவறுகிறது என்று பொருள் கொள்கிறோம். அடுத்து நடப்பதால் அடி ஆயிற்று. பாட்டு நடப்பதற்கு அடிபோல் உதவுவதால் இப்பெயர் வந்த தாகவும் கொள்ளலாம்.

தொடை என்பது தொடுக்கப் பெறுவது என்னும் பொருளுடையது. தொடுக்கும் மாலைக்கும் தொடை யென்று பெயர் உண்டு. அழகு பெறத் தொடுக்கும் மாலை போலச் செய்யுளில் அழகு அமைய அமைவது தொடை. தொடைகள் எட்டு: மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை, அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை. இவற்றில் முதல் ஐந்தும் சிறப்பானவை. அவற்றிலும் எதுகை, மோனை என்னும் இரண்டையுமே இப்போது பாவாணர்கள் கவனித்து அமைத்து வருகிறார்கள்.

எதுகை, மோனை என்னும் இரண்டு தொடை களையும் பற்றி ஓரளவு முதல் பாகத்தில் தெரிந்து கொண்டோம். இனி அவற்றின் வகைகளையும் பிற தொடைகளையும் பற்றிக் கவனிப்போம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/125&oldid=655717" இலிருந்து மீள்விக்கப்பட்டது