பக்கம்:கவி பாடலாம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பில்லாத எதுகை மோனைகள் 131

நெடில் மோனை:

“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.” இதில் முதல் எழுத்துக்கள் ஒன்றி வராவிட்டாலும் அவை நெடிலாக இருப்பதனால் நெடில் மோனை ஆயிற்று.

இன எதுகை: இன எழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுத்தால் இன எதுகை. அது வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என்று மூன்று வகைப்படும்.

‘தக்கார் தகவில ரென்பதவரவர்

எச்சத்தாற் காணப்படும்.” இந்தக் குறளில் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வராவிடினும் அவை வல்லினமாக அமைந்துள்ளன. இது - வல்லின எதுகை. --

அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் அண்ணாளன் பக்கத் தேவந்தின்ப மளித்தாற் பாங்கின்றோ? இதிலும் வல்லின எதுகை வந்தது.

“அன்பினு மார்வ முடைமை யதுவினும்

நண்பென்னு நாடாச் சிறப்பு. இந்தக் குறளில் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வராவிடினும் அவை மெல்லினமாக வந்தமையின், இது

மெல்லின எதுகை.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு. r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/132&oldid=655725" இலிருந்து மீள்விக்கப்பட்டது