பக்கம்:கவி பாடலாம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கவி பாடலாம்

இதில் இரண்டாம் எழுத்தாக லகர யகரங்கள் வந்தமையால் இது இடையின எதுகை.

இன மோனை: இன எதுகைக்குச் சொன்னபடியே மோனை வரும் இடங்களில் இன எழுத்துக்கள் வந்தால் அது இன மோனை ஆகும்.

கருத்துச் செறிவும் கவினார் ஓசையும் சிறப்பச் சேரும் திறமுறின் கவியாம்; திருத்த மின்றிச் சீரிற் சிதைவுறப் பொருத்த மில்லாச் சொற்கள் புகுத்திச் செய்யும் கவியைச் செய்யுளாக் கொள்ளார் தண்டமிழ் நெறியின் தகையுணர்ந்தோரே.

இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியின் முதலிலும் வல்லின எழுத்துக்கள் வந்தன. இது வல்லின மோனை. -

நட்டாரை வாழ்த்தி நலஞ்செய்வார் தம்பாலே மெச்சிப் புகுவார் பலர்.

இதில் மெல்லின மோனை வந்தது.

யானை யனையார் எலியனையார் என்றிருவர் வாழ்வார்.இவ் வையகத்து. இதில் இடையின மோனை வந்தது.

மூவகை எதுகை: தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என்று மூன்று வகை உண்டு. சீர் முழுவதும் ஒன்றி வருவது தலையாகெதுகை; ஓரெழுத்து மட்டும் ஒன்றி வருவது இடையாகெதுகை, மற்றவை கடையாகெதுகை. -

கலைநவின்ற பெரும்புலமைக் கவிஞர்களைப் போற்றிசைத்து நிலைநவின்ற பன்னூல்கள் நேயத் துடனியற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/133&oldid=655726" இலிருந்து மீள்விக்கப்பட்டது