பக்கம்:கவி பாடலாம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவி பாடலாம்.

வடியமை யெஃகம் வலவயி னேந்தித் தனியே வருதி நீயெனின் மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே.”

இதில் இகரமாகிய உயிர் இரண்டாம் எழுத்துக்களில் வந்தமையால் உயிரெதுகை ஆயிற்று. :

ய, ர, ல, ழ என்னும் மெய்யெழுத்துக்கள் இடையே நிற்க ஒன்றினால் அது ஆசிடையிட்ட எதுகையாகும்.

“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்

பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து.’

இதில் காமாண்ட, பூமாண்ட என்று இருந்தால் எதுகை சிறக்கும். ஆனால் முதலடியில் யகர ஒற்று. இடையே வந்தது. இது ஆசிடையிட்ட எதுகை. ஆசு என்பது ஒட்டாத இரண்டு உலோகப் பொருள்களை ஒட்டும்படி இடையே அமைக்கும் பொருள் பற்றாசு என்று அதனைச் சொல்வார்கள். அது போல இருப்பதனால் இதை ஆசு என்றார்கள்.

“மாக்கொடி மானையும் மவ்வற் பந்தரும்

கார்க்கொடி முல்லையும் கலந்த பந்தரில்.”

இதில் இரண்டாமடியில் ரகர ஒற்று இடையில்

வந்தது. இது ரகர ஆசிடையிட்ட எதுகை.

“ஆவேறுருவின ஆயினும் ஆபயந்த

பால்வேறுருவின அல்லவாம்.”

இது லகர ஆசிடையிட்ட எதுகை.

“வாழ்கின்றே மென்று மகிழன்மின், வாணாளும்

போகின்ற பூளையே போன்று."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/135&oldid=655728" இலிருந்து மீள்விக்கப்பட்டது