பக்கம்:கவி பாடலாம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பிற தொடைகளும் வகையும்

மோனை, எதுகை என்ற இரண்டு தொடைகளின் இலக்கணத்தையும் அவற்றின் வகைகளையும் அறிந் தோம். இனிப் பிற தொடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இயைபுத் தொடை இறுதியில் உள்ள எழுத்தாவது சொல்லாவது ஒன்றிவரத் தொடுப்பது இயைபுத் தொடை. அடிதோறும் இப்படி வருவது அடி இயைபுத் தொடை

இந்திய நாட்டின்ை இணைத்தவன் காந்தியே சொந்தநாடென்று சொன்னவன் காந்தியே சுதந்தரம் பெறும்வகை துணிந்தவன் காந்தியே இதம்பெறு மன்புரு வேயக் காந்தியே. இந்த அகவற்பாவில் அடிதோறும் ஈற்றுச்சீர் இணைந்து வந்தமையால் இது அடி இயைபு.

எதுகை, மோனைகளுக்குக் கூறிய இணை முதலிய வகைகள் இயைபு, முரண், அளபெடை என்ற மூன்று தொடைகளிலும் உண்டு. மற்றத் தொடைகளுக்கு முதற் சீரிலிருந்து பார்க்க வேண்டும். இயைபுக்குக் கடைசிச் சீரிலிருந்து பார்க்க வேண்டும். -

“மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

மற்றதன் அயலே முத்துறழ் மணலே நிழலே இனியதன் அயலது கடலே. மாதர் நகிலே வல்லே இயலே வில்லே நுதலே வேற்கண் கயலே பல்லே தளவம் பாலே சொல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/138&oldid=655731" இலிருந்து மீள்விக்கப்பட்டது