பக்கம்:கவி பாடலாம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - கவி பாடலாம்

புயலே குழலே மயிலே இயலே

அதனால் - இவ்வயின் இவ்வுரு இயங்கலின் எவ்வயி னோரும் இழப்பர்தந் நிறையே.”

இந்த ஆசிரியப்பாவில் முதல் ஏழு அடிகளிலும் முறையே இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒருஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க் கதுவாய் இணைபு, முற்று இயைபு என்னும் ஏழும் வந்தன. முதல் இரண்டு சீர்களில் மோனை வந்தால் இணைமோனை என்று பெயர் பெறும். பிற தொடைகளும் அப்படியே பெயர் பெறும். ஆனால் இயைபுக்கு மாத்திரம் இறுதியி லிருந்து நோக்கி வகை கூற வேண்டும். பின் இரண்டு சீரில் இணைந்து வந்தால்தான் இணையியைபு என்று. சொல்ல வேண்டும். மற்றவையும் இப்படியே பார்த்து வகை தெரிந்து கொள்ள வேண்டும்.

முரண் தொடை: முரண் என்பது விரோதம் அல்லது மாறுபாடு. சொல்லால் முரணாவது சொல் முரண்; பொருளால் மாறுபடுவது பொருள் முரண். காட்டாவைக் காட்டினான்’ என்பதில் காட்டா, காட்டி என்பவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதுபோலச் சொல்லளவில் தோன்றுகின்றன. பொருளை நோக்கினால் சொற்களே வேறு; ஒரே பகுதியில் தோன்றியவை அல்ல. காட்டா என்பது காட்டுப் பசு என்ற பொருளையுடையது. இது சொல் முரண். - -

மேடு-பள்ளம், இருள்-ஒளி, செல்வம்-வறுமை: இவை பொருள் முரண். -

சொல்லாலோ பொருளாலோ முரண்படும் சொற்கள் தொடர்ந்து வருவது முரண் தொடை மற்றத் தொடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/139&oldid=655732" இலிருந்து மீள்விக்கப்பட்டது