பக்கம்:கவி பாடலாம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கவி பாடலாம்

இந்தப் பாட்டில் முதல் ஏழு அடிகளிலும் முறையே இணை முரண், பொழிப்பு முரண், ஒருஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண் என்பன வந்தன.

துவர்வாய்-தீஞ்சொல் என்பன சொல் முரண்; துவர்வாய் என்பது துவர்க்கும் வாய் என்ற பொருளைத் தோற்றச் செய்தது; ஆனால் அதன் இயல்பான பொருள் பவழம் போன்ற வாய் என்பது. தீஞ்சொல்-இனிய சொல். துவர்ப்பும் இனிமையும் முரண்பட்டன.

அளபெடைத் தொடை உயிரளபெடையோ ஒற்றள பெடையோ தொடர்ந்து வருவது அளபெடைத் தொடை. இதிலும் அடியளபெடையும், இணையளபெடை முதல் முற்றளபெடை வரையிலும் உள்ள ஏழும் உண்டு.

‘ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ

டீஇ ரிரையும்கொண் டீரளைப் பள்ளியுள் தூஉம் திரையலைப்பத் துஞ்சா திறைவ்ன்தோள் மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால் ஓஒ உழக்கும் துயர்.”

இதில் அடிதோறும் முதற்சீரில் அளபெடை வந்தமை யால் இது அடியளபெடைத் தொடை.

“தாஅன் தாஅ மரைமலர் உழக்கிப் பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஓட்டெருமை தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் மீஇன் ஆஅர்ந்துகளும் சீஇர் ஏஎர் ஆஅர் நீஇள் நீஇர் ஊரன் செய்த கேண்மை ஆய்வளைத் தோளிக் கலரா னாதே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/141&oldid=655735" இலிருந்து மீள்விக்கப்பட்டது