பக்கம்:கவி பாடலாம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற தொடைகளும் வகையும் 141

இந்தச் செய்யுளில் முதல் ஏழு அடிகளில் முறையே இணையளபெடை, பொழிப்பளபெடை, ஒரூஉ அள பெடை, கூழையளபெடை, மேற்கதுவாயளபெடை, கீழ்க் கதுவாயளபெடை, முற்றளபெடை என்ற ஏழும் வந்தன.

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்ற ஐந்தும் அடி முதல் முற்றுவரையில் உள்ள எட்டு வகைகளாக அமையும்.

இப்படி அமையாத தொடைகள் மூன்று உண்டு. அவை அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந் தொடை என்பன.

அந்தாதித் தொடை: அடிதோறும், ஒரடியின் இறுதி யிலுள்ள எழுத்தோ அசையோ சீரோ அடியோ அடுத்த அடியின் முதலில் தொடர்ந்து வரும்படி தொடுப்பது அந்தாதித் தொடை.

“உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி

மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழற் பொற்புடை யாசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனவ் வாசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தர தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே.” இந்த அகவலின் புரிந்து-துன்னிய, தென்ப-பன்னரும் என்பவற்றில் எழுத்துக்கள் அந்தாதித்து வந்தன. அவிர்மதி. மதிநலன், அறிவனை-அறிவுசேர், உலகே-உலகுடன் என்பவற்றில் அசைகள் அந்தாதியாயின. முக்குடை, ஆசனம் என்னும் சீர்கள் அந்தாதித்து மீட்டும் வந்தன. 4,5-ஆம் அடிகளே அந்தாதித்து வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/142&oldid=655736" இலிருந்து மீள்விக்கப்பட்டது