பக்கம்:கவி பாடலாம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கவி பாடலாம்

இறுதி அடியின் இறுதிச் சீரும், முதல் அடியின் முதற் சீரும் அந்தாதியாக அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

இரட்டைத்தொடை: ஒரடி முழுவதும் வந்த சொல்லே திரும்பத் திரும்ப வரும்படி தொடுப்பது இரட்டைத் தொடை. இது நாற்சீரடிகளில் வருவது.

“ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்

விளக்கினுட் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்.”

இதில் முதலடியில் இரட்டைத் தொடை வந்தது.

செந்தொடை: எந்தத் தொடையும் இல்லாமல் வருவது செந்தொடை.

“ வேங்கை வியன்சினை ஏறி

மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.”

இந்தப் பாட்டு மோனை, எதுகை முதலிய தொடை களில் ஏதும் வாராமல் தொடுத்தமையால் இது செந்தொடை.

பிற வகைகள்: மேலே சொன்ன அடிமுதல் முற்று வரையில் உள்ள தொடை வகைகள் நாற்சீரடிகளிலே அமைவன. இந்த வகைகளையன்றி வேறு சில வகைகளும் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்னும் தொடைகளுக்குக் கூறுவதுண்டு. அவை சிறப்புடையன அல்ல. r

கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப் புணர் என ஐந்து வகைப்படுவன அவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/143&oldid=655737" இலிருந்து மீள்விக்கப்பட்டது