பக்கம்:கவி பாடலாம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஓசைகளின் வகை

Liாக்கள் நான்கு வகை என்பதை முன்பு பார்த்தோம். ஒவ்வொரு வகைப் பாவுக்கும் ஒவ்வோர் ஓசை உண்டு. இந்த ஒசையைத் தளையைக் கொண்டு தெரிந்து கொள்ளும் முறையை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் சொல்கின்றன. தொல்காப்பியம் தளையை வரையறுக்க வில்லை. பாக்களுக்குத் தனித்தனியே உள்ள ஒசையின் இயல்பை, கேட்ட பழக்கத்தைக் கொண்டு அறிய வேண்டும் என்று தொல்காப்பிய உரையில் பேராசிரியர் சொல்கிறார். அந்த ஓசையைத் தெரிந்து கொள்ளக் கூர்மையான செவி வேண்டுமாம். அத்தகைய செவியை எஃகுச் செவி என்று கூறுவர். -

இசையில் ஒர் இராகத்தைப் பாடும்போது இன்ன இராகம் என்று கேட்டவுடனே பழக்கம் உள்ளவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஆரோகண அவரோகண சுவரங் களை வைத்துக் கணக்குப் பார்த்த பிறகு தெரிந்து கொள்வ தில்லை. காதினால் கேட்டு இன்ன இராகம் என்று தெரிந்த பிறகு அதற்குரிய இலக்கணத்தை ஒட்டிப் பார்த்தால் அது சரியாக அமைந்திருப்பதை உணரலாம். .

இராகத்தைச் சுவரத்தால் வரையறை செய்து தெரிந்து கொள்வது போன்றது, தளையைப் பார்த்து இன்ன ஓசை என்று தெரிந்து கொள்ளும் முறை.

வெண்பாவுக்கு உரியது செப்பல் ஒசை. செப்பல் என்பதற்கு விடை கூறுதல் என்று ஒரு பொருள் உண்டு. கேள்வியை வினாவென்றும், விடையைச் செப்பு என்றும் இலக்கண நூல்கள் சொல்லும். முன் இரண்டடி ஒரு கேள்வியைச் சொல்லப் பின் இரண்டடி அதற்குரிய

க. பா.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/146&oldid=655740" இலிருந்து மீள்விக்கப்பட்டது