பக்கம்:கவி பாடலாம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கவி பாடலாம்

விடையைச் சொல்ல, நடுவில் தனிச்சீரில் ஒரு நிறுத்தத்தைப் பெறும் வகையில் வெண்பா அமைந்திருக்கிறது. அதனால் செப்பலோசை என வந்ததென்று தோன்றுகிறது.

“அப்பிலே தோய்த்திட் டடித்தடித்து நாமதனைத்

தப்பினால் அஃதுநமைத் தப்பாதோ-செப்பக்கேள் இக்கலிங்கம் போனால்பின் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்க முண்டே துணை’

என்பதில் இப்படி அமைந்திருப்பதைக் காணலாம்.

வெண்பாவின் ஓசையை வெள்ளோசை என்றும் சொல்வதுண்டு.

ஆசிரியப்பாவின் ஒசை அகவலோசை, ஆசிரியப் பாவுக்கே அகவற்பா என்று ஒரு பெயர் உண்டல்லவா? அது அந்த ஒசையினால் வந்ததுதான். அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது. ஒவ்வோரடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது தான் காரணம் போலும்.

கலிப்பாவின் ஒசை துள்ளலோசை என்று பெயர் பெறும். அலைகள்துள்ளுவது போல இருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

வஞ்சிப்பாவுக்கு உரியது துரங்கலோசை. தூங்கல்தொங்குதல். கனத்தால் தொங்குவது போல நெடுஞ் சீர் களால் அமைந்திருப்பதனால் இந்தப் பெயர் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது. -

இந்த நான்கு வகை. ஒசைகளில் ஒவ்வொன்றும் மூன்று மூன்றாகப் பிரிந்து பெயர் பெறும். செப்பலோசை யானது ஏந்திசைச் செப்பலோசை, தூங்கிசைச் செப்ப லோசை, ஒழுகிசைச் செப்பலோசை என்று மூன்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/147&oldid=655741" இலிருந்து மீள்விக்கப்பட்டது