பக்கம்:கவி பாடலாம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசைகளின் வகை 151

வஞ்சிப்பாவுக்குரிய துரங்கலோசையும் ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என்று மூன்று வகைப்படும். -

(1) ஒன்றிய வஞ்சித் தளையால் வருவது ஏந்திசைத் துரங்கலோசை,

“வினைத்திண்பகை விழச்செற்றவன்

வனப்பங்கய மலர்த்தாளிணை நினைத்தன்பொடு தொழுதேத்துநர் நாளும் - மீயலார் நாற்கதி மருவார் பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே.”

இதில் கனிமுன் நிரை வந்து ஒன்றிய வஞ்சித் தன்ளை அமைந்தமையின் ஏந்திசைத் துரங்கலோசை வந்தது. பின்னால் உள்ள இரண்டு அடிகளும் ஆசிரியச் சுரிதகம்.

(2) ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது அகவல் துங்கலோசை.

“வானோர்தொழ வண்டாமரைத்

தேனார்மலர் மேல்வந்தருள் ஆனாவருள் கூரறிவனைக்

கானார் மலர்கொண்டேத்தி வணங்குநர் பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே.” இதில் கனி முன் நேர் வந்து, ஒன்றாத வஞ்சித் தளை அமைந்தமையால் அகவல் தூங்கலோசை ஆயிற்று.

(3) மேலே சொன்ன இரண்டு தளைகளும் பிறவும் விரவி வந்தால் அதைப் பிரிந்திசைத்துங்கலோசை என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/152&oldid=655747" இலிருந்து மீள்விக்கப்பட்டது