பக்கம்:கவி பாடலாம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கவி பாடலாம்

இது குறள்வெண்பாவைப் போலத் தோற்றினாலும், பெரியாரோ டிருந்தாலும் என்ற இடத்தில் கலித்தளை அமைந்து செப்பலோசை பிறழ்ந்தமையால் இது குறள் தாழிசை ஆயிற்று.

பின் இரண்டும் அத்துணைச் சிறப்புடையன அல்ல.

வெளி விருத்தம்

இனி வெண்பாவின் இனங்களைக் கவனிக்கலாம்.

வெளி விருத்தத்தைப் பற்றி முன்பு ஓரளவு அறிந்தோம். ஐஞ்சீரடி மூன்றோ நான்கோ வந்து, ஐந்தாவது சீர் ஒரே சொல்லாக வருவது வெளிவிருத்தம்.

“ஒருமூன்றொருநான் கடியடி தோறும்

தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே” ான்பது காக்கைப்பாடினியம் என்ற பழைய யாப்பிலக்கணச் சூத்திரம்.

“கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்

என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்

என்செய்கோயான் எண்டிசையுந் தோகை இயைந்தகவி ஏங்கினவால்

என்செய்கோயான்.” - -

இது மூன்று அடியாகி, அடிதோறும் இறுதியில் என் செய்கோயான் என்ற தனிச் சொல்லைப் பெற்று வந்த வெளி விருத்தம். ஐந்தாம் சீராக ஒரே தொடர் மீட்டும் மீட்டும் வந்திருத்தலைக் கவனிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/155&oldid=655750" இலிருந்து மீள்விக்கப்பட்டது