பக்கம்:கவி பாடலாம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பா இனம் 155

“ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார் ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒருசாரார்.”

இது நாலடியாய் வந்த வெளி விருத்தம்.

வெண்டாழிசை

மூன்று அடிகளை உடையதாய் முதல் இரண்டும் நாற்சீரடிகளாகவும், ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீர் அடியாகவும் நிற்பது வெண்டாழிசை ஆகும். இதனை வெள்ளொத்தாழிசை என்றும் கூறுவது உண்டு. -

“நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்.’

இது வெண்டாழிசை வெண்டளை பிறழாமல் இச்செய்யுள் வந்திருந்தால் சிந்தியல் வெண்பாவாகும். அப்படி வாராமையால் இது வெண்டாழிசையாயிற்று.

சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தால் அதையும் வெள்ளொத்தாழிசை என்று சொல்வதுண்டு.

“அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

ஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்.”

“ஏ.டீ அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/156&oldid=655751" இலிருந்து மீள்விக்கப்பட்டது