பக்கம்:கவி பாடலாம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கவி பாடலாம்

பாவாய் அறங்கொல் நலங்கிளர்சேட்சென்னி

மேவார் உடைபுலம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்.”

இந்த மூன்றும் ஒரு பொருளை மூன்று வேறு வகையில் சொல்வதால் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்தன. இம் மூன்றும் இணைந்து ஒரு வெள்ளொத் தாழிசையாக அமைந்தன. -

வெண்டுறை

மூன்று அடி முதல் ஏழடி வரையில் உடையனவாய், பின் உள்ள சில அடிகள் சில சீர்குறைந்து வருவனவெண்டுறை ஆகும். எத்தனை சீராலும் அடிகள் அமையலாம். அடிகள் யாவும் ஒரே ஒலியாக வந்தால் ஓரொலி வெண்டுறை என்றும், சீர் குறையும் பின்னடிகள் வேறு ஒலியாக வந்தால் வேற்றொலி வெண்டுறை என்றும் பெயர் பெறும்.

“குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்

குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென்

றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சழிந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பானோ அல்லன்.”

இது நான்கடியாய், ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர்குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

“தாளாளர் அல்லாதார் தாம்பல ராயக்கால்

என்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்த்துவிடும் பிலிற்றி யாங்கே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/157&oldid=655752" இலிருந்து மீள்விக்கப்பட்டது