பக்கம்:கவி பாடலாம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பா இனம் 157

இது மூன்றடியால் வந்து, ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

“முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகம் புரந்தளித்து

முறைசெய் கோமான் வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் தாக்கரிய

வைவேல் பாடிக் கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம் இலங்குவா ளிரண்டினா லிருகைவி சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந்தாடவா டும்மிவள் பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாடவே.”

இது ஏழடியாய் முதல் இரண்டடியும் ஆறு சீராய் ஒரோசையுடையனவாய், பின்புள்ள ஐந்தடியும் நாற்சீராய் வேற்றோசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை.

ஈற்றடி ஒரு சீர் குறைந்து வருவதும் வெண்டுறையின் பாற்படும். -

‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்

உறவுற வரும்வழி உரைப்பன உரைப்பன்மன் செறிவுறு தகையினர் சிறந்தனர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிறபிற நிகழ்வன பின்.”

இது ஐந்தடியாய் இறுதி அடி ஒரு சீர் குறைந்து வந்த ஒரொலி வெண்டுறை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/158&oldid=655753" இலிருந்து மீள்விக்கப்பட்டது