பக்கம்:கவி பாடலாம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியத் தாழிசையும் துறையும் 159

“கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்

எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.” இவை மூன்றடியால் அளவொத்து ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை,

ஒரடிக்கு இத்தனை சீர் என்ற வரையறை இல்லை. எத்துணைச் சீராலும் மூன்றடி அமைந்து வரலாம்.

ஆசிரியத்துறை ஆசிரியத் துறை நான்கு வகைப்படும். நான்கு அடிகளாய் இடையிலே குறைந்த அடிகளை உடையனவாய் வருவது பொது இலக்கணம். அந்த நால்வகையும் வருமாறு:

1. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து

வருவது. - 2. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து

இடைமடக்காய் வருவது. 3. நான்கடியாய் இடையிடை குறைந்து வருவது. 4. நான்கடியாய் இடையிடை குறைந்து மடக்காய்

வருவது. ஒரடிக்கு எத்துணைச் சீரும் வரலாம். 1. சாந்தமலை யாமனத்துத் தாபர்கள் நனிபோற்றித்

தாழும் குன்றம் * காந்தமலை எனவறிந்து சென்றினிது மலர்தூவிக்

கந்த னைவேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/160&oldid=655756" இலிருந்து மீள்விக்கப்பட்டது