பக்கம்:கவி பாடலாம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரிய விருத்தம் 163

ஆறு, ஏழு, எட்டுச் சீர்களால் வரும் ஆசிரிய விருத் தங்களே சிறப்புடையன என்று கூறுவர்.

காவிரிக் கரையில் மோகைக் கடிநகர்ப்புறத்தே ஓர்சார் பூவிரித் திலகும் சோலை பொதுளிய காந்தக் குன்றம் நாவிரித்தமைந்தபாவில் வல்லவர் நவின்ற சீர்கொண் டோவியத் தகுதி பெற்றே உயர்ந்தது காண்பிரன்றே. இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

வண்ணக் கடம்ப மலர்த்தாரான் வள்ளியணையும் திருமார்பன் சுண்ண நீறு சுடர்முகங்கள் துலங்கு மோராறுடையவள்ளல் உண்ணத் தெவிட்டாப் பேரமுத மொத்த பாவால் அருணகிரி திண்ணத்துடனே பாடஅருள்தேவன் என்றும்துணையாவான். இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். கஞ்சமலர் நான்முகனைத் தலைக்குட்டிச் சிறையிருத்தும்

கந்த சாமி - நெஞ்சமலர் அன்புடையோர்க் கெந்நாளும் துணையாகும்

நேயன் தூயன் வஞ்சமலர் தருமனத்துச் சூரபன்மன் குலமுழுதும்

மடித்த வேலன் - தஞ்சமென அடிவணங்கிப் புகலடைந்தோர் தம்மடியே

சார்து மன்றே. இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/164&oldid=655760" இலிருந்து மீள்விக்கப்பட்டது