பக்கம்:கவி பாடலாம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கவி பாடலாம்

செம்மையே யாய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ திணியே.” இது எழுசீர்க் கழிநெலடி ஆசிரிய விருத்தம்.

சீதங்கொள் கடம்பலங்கல் மார்பி னானைத்

திருமாலின் மருமகனைப் புலவர் பாடும் கீதங்கொள் பெருமானைச் சோதி வைவேல்

கெழுமுதிருக் கரத்தானைச் சிறகடித்து நாதங்கொள் தனிச்சேவல் கொடியாக் கொண்ட

நாயகனைத் தாயனைய அருளி னானைப் பாதங்கொள் பற்றென்னப் பற்றி னார்க்குப்

பயனாய கடவுளினைப் பரவு வோமே,

இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

‘மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன் றறியேன்

மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை பறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினிலோ ரிடத்தே இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவு மறியேன்

எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறிவேனோ இருந்த திசை சொலவறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.”

இதுவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமே.

வானின் மேயவர்கள் சூரனாலிடர்கொள் போதி லேயவர்தம்

வாழ்வு சீரடைய வைத்தவன் -

தேனி னோடுதினை பூண தாகவளி காடு மேவுமகள்

சீரு லாவுமெழில் சிந்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/165&oldid=655761" இலிருந்து மீள்விக்கப்பட்டது