பக்கம்:கவி பாடலாம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் 169

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு.

(தரவு)

‘வானெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந்தண் டகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ,

(தாழிசை) சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே. (1)

சேனுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நயமிலரே. (2)

சிலம்படைந்த வெங்கானம் சீரிலவே என்பவால் புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே. (3)

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்}

அருளென லிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னொடுந் தேரொடும் தாளையிற் பொலிந்தே.” இந்தக் கலிப்பாவில் தரவு ஒன்றும், தாழிசைகள் மூன்றும், தனிச் சொல்லும், சுரிதகமும் அமைந்துள்ளமை யின் இது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/170&oldid=655767" இலிருந்து மீள்விக்கப்பட்டது