பக்கம்:கவி பாடலாம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் 171

(தாழிசை)

முரசதிர் வியன்மதுரை முழுவது உம் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? (1)

கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்மலைந்து சேணுயர் இருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ? (2)

படுமணி யினநிரை பரந்துடன் இரிந்தோடக் கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ? (3)

(அம்போதரங்கம்)

இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம் (1) விரியினர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை. (2) (இவை பேரெண்)

கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை, (1) தண்சுடர் உறுபுகை தவிர்த்த ஆழியை, (2) ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியை, (3) வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. (4)

(இவை அளவெண்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/172&oldid=655769" இலிருந்து மீள்விக்கப்பட்டது