பக்கம்:கவி பாடலாம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் 175

(அராகம்)

தாதுறு முறிசெறி தடமலரிடையிடைத்

தழலென விரிவன பொழில் போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு

கருநெய்தல் விரிவன கழி தீதுறு திறமறு கெனநனி முனிவன

துணையொடு பிணைவன துறை மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்.

(அம்போதரங்கம்)

கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால் இடுங்கழி யிரவருதல் வேண்டாமென் றுரைத்திலமோ? (1)

கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ? (2)

(இவை பேரெண்)

நானொடு கழிந்தன்றால் பெண்ணரசிநலத்தகையே; (1) துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளிதடங்கண்ணே, (2) அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; (3) நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே. (4)

(இவை அளவெண்)

அத்திறத்தா லசைந்தன தோள். (1) அலரதற்கு மெலிந்தன க்ண். (2) பொய்த்துரையாற் புலர்ந்தது முகம். (3) பொன் னிறத்தாற் போர்த்தன முலை, (4) அழலினா லசைந்தது நகை. (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/176&oldid=655773" இலிருந்து மீள்விக்கப்பட்டது