பக்கம்:கவி பாடலாம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் 177

கலந்த வண்மையை யாயினும் நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணியம் யாமே பொற்பொடு பொலிகதும் புணர்ச்சி தானே.”

இதில் உள்ள அராக உறுப்பு ஏழு சீர்களை உடைய அடிகள் நான்கால் வந்தது காண்க. இதில் உள்ள அம் போதரங்க உறுப்பில், முறையே நாற்சீர் ஈரடிகளாலான இரண்டு பேரெண்ணும், நாற்சீர் ஒரடியால் ஆன நான்கு அளவெண்ணும், முச்சீர் ஒரடியால் ஆன எட்டு இடை யெண்ணும், இரு சீர் ஓரடியால் ஆன பதினாறு சிற் றெண்ணும் வந்தன.

வெண்கலிப்பா

கலித்தளையும், வெண்டளையும் விரவிவந்த நாற் சீரடிகளால் நடந்து இறுதியடி மூன்று சீர்களால் அமைந்தால் அது வெண்கலிப்பா ஆகும். வெண்டளையே வந்தால் அது கலிவெண்பாவாம். வெண்கலிப்பாவுக்கு உதாரணம்.

“வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்

கோளார்ந்த பூனாகம் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான் மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீட்டெடுகட் டிவையுரைத்த தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு.”

இந்தப் பாட்டில் காய்முன்நிரை வந்த கலித்தளையும், காய்முன் நேர் வந்த வெண்டளையும் விரவி வந்தது காண்க.

க. பா.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/178&oldid=655775" இலிருந்து மீள்விக்கப்பட்டது