பக்கம்:கவி பாடலாம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 82 கவி பாடலாம்

கொடித்தேர் அண்ணல் கொற்கைக் கோமான் நின்றபுகழ் ஒருவன் செம்பூண் சேஎய் என்றுநணி அறிந்தனர் பலரே தானும் ஐவருள் ஒருவன்என்றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.”

இது சிஃறாழிசைக் கலிப்பா. இதில் தாழிசைகளுக்கு முன்னே தனிச் சொற்கள் வந்தன; அவை வராவிடின் இது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா ஆகிவிடும்.

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

தரவு ஒன்றும் மூன்றுக்கு மேற்பட்ட தாழிசைகளும் தனிச்சொல்லும் சுரிதகமும் வந்தால் அது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும்.

(தரவு)

“தண்மதியேர் முகத்தாளைத்

தனியிடத்து நனிகண்டாங்

குண்மதியு முடைநிறையு

முடன்தளர முன்னாட்கண்

கண்மதியொப் பிவையின்றிக்

காரிகையை நிறைகவர்ந்து

பெண்மதியின் மகிழ்ந்தநின்

பேரருளும் பிறிதாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/183&oldid=655781" இலிருந்து மீள்விக்கப்பட்டது