பக்கம்:கவி பாடலாம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84 கவி பாடலாம்

(தனிச்சொல்)

அதனால்

(சுரிதகம்)

அரும்பெற லிவளினும் தரும்பொரு ளதனினும் பெறும்பெற லரியன வெறுக்கையும் அற்றே விழுமிய தறிமதி வாழி தழுவிய காதலிற் றரும்பொருள் சிறிதே.” இந்தப் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவில் ஒரு தரவும், ஆறு தாழிசைகளும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் வந்தன. தரவினும் குறைந்த அடிகளை உடையது தாழிசை என்பது நினைவில் இருத்தற்குரியது.

13. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

கலிப்பாவுக்கு உரிய உறுப்புக்கள் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு என்பதை முன்பே அறிவோம். இந்த ஆறு உறுப் புக்களும் மிகுதியாகவும் குறைவாகவும் இடம் மாறியும் வந்தால் அது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகும்.

(தரவு)

“மணிகொண்ட திரையாழி

சுரிநிமிர மருங்கசைஇப் பணிகொண்ட முடிச்சென்னி

அரங்காடும் பைந்தொடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/185&oldid=655783" இலிருந்து மீள்விக்கப்பட்டது