பக்கம்:கவி பாடலாம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 - கவி பாடலாம்

(சுரிதகம்)

பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக் கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடி அண்ணலானேறு மண்ணுண்டு கிடப்பக் கண்போற் பிறழும் கெண்டைவலன் உயர்த்து வரியுடற் கட்செவி பெருமூச் செறியப் பொன்புனைந் தியன்ற பைம்பூண் தாங்கி முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசில் பசும்பொனசும் பிருந்த டைம்பொன்முடி கவித்தாங் கிருநிலம் குளிர்துங் கொருகுடை நிழற்கீ அரசுவிற் றிருந்த ஆதியங் கடவுள்நின் பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும் ஐம்புல வழக்கின் அருஞ்சுவை யறியாச் செம்பொருட் செல்வனின் சீரடித் தொழும்புக் கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக பிறிதொரு கடவுட்குப் பெரும்பயன் தரூஉம் இறைமையுண் டாயினு மாக குறுகிநின் சிற்றடி யவர்க்கே குற்றேவல் தலைக் கொண் டம்மா கிடைத்தவா வென்று செம்மாப் புறுஉம் திறம்பெறற் பொருட்டே.”

இந்தப் பாட்டில் எட்டடித் தரவு ஒன்றும், ஈரடித் தாழிசைகள் ஆறும், அராகமும், மீட்டும் ஈரடித் தாழிசைகள் நான்கும், அம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும், பத்தொன்பதடி ஆசிரியச் சுரிதகமும் வந்தன. இதற்கு முன் நாம் பார்த்த கலிப்பா வகையில் இப்படி உறுப்புக்கள் கொண்ட பாட்டு ஒன்றும் இல்லை. இதில் இடவரை யறையின்றியும் இத்தனை என்ற வரையறையின்றியும் உறுப்புக்கள் கலந்து அமைந்தமையின் இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆயிற்று. தமிழில் உள்ள பிரபந்தங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/189&oldid=655787" இலிருந்து மீள்விக்கப்பட்டது