பக்கம்:கவி பாடலாம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

கவி பாடலாம்

கலங்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால், (5)

வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத் தாழுமென் னிலைகண்டும் தாங்கலனே என்றியால். (6)

(தனிச்சொல்)

அதனால்

(அராகம்)

அடும்பல் இறும்பி னெடும்பணை மிசைதொறும் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு. (1)

செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர் நெறிதரு புரவியின் மறிதரும் திமில் (2)

அரைசுடை நிரைபடை விரைசெறி முரைசென நுரைதரு திரையொடு கரைபொரும் கடல். (3)

அலங்கொளிர் அவிர்சுடரிலங்கொளி மறைதொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில். (4)

(தாழிசை)

விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ? (1)

ஒல்லாது கழலுமென்னொளிவளையுந் தவிப்பாய்மன் நில்லாது பெருகுமென்னெஞ்சமும் நிறுப்பாயோ? (2)

தாங்காது கலுழுமென் றகைவளையும் தவிர்ப்பாய்மன் நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ? (3)

மறவாத அன்பினேன் மனனிற்கு மாறுரையாய் துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/191&oldid=655790" இலிருந்து மீள்விக்கப்பட்டது