பக்கம்:கவி பாடலாம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா i81

காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய் ஏதிலார் தலைசாய யானிற்கு மாறுரையாய், (5)

இணைபிரிந்தார் மார்பன்றி யின்பக்கு மருந்துரையாய் துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் (6)

(தனிச்சொல்)

எனவாங்கு, (அம்போதரங்கம்)

பகைபோன் றதுதுறை-பரிவா யினகுறி நகையிழந் ததுமுகம்-நனிவாடிற் றுடம்பு தகையிழந் தனதோள்-தலைசிறந் ததுதுயர் புகைபரந்ததுமெய்-பொறையா யிற்றுயிர்.

(தனிச்சொல்)

அதனால்,

(சுரிதகம்)

இண்ையது நினையா வனையது பொழுதால் நினையல் வாழி தோழி தொலையாப் பனியொடு கழிக உண்கண்

என்னொடு கழிகவித் துன்னிய நோயே.

இது தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச் சொல்லும், அராகம் நான்கும், மீண்டும் தாழிசை ஆறும், தனிச் சொல்லும், அம்போதரங்க உறுப்பு எட்டும், தனிச் சொல்லும், நான்கடிச்சுரிதகமும் பெற்று வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/192&oldid=655791" இலிருந்து மீள்விக்கப்பட்டது