பக்கம்:கவி பாடலாம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கவி பாடலாம்

கலித்துறை

ஐந்து சீர்களை உடைய அளவொத்த நான்கடிகளால் வருவது கலித்துறை.

“யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கலியன்றோ.”

இவை ஐந்து சீர்களையுடைய நெடிலடி நான்கால் வந்த கலித்துறை.

பொன்னைப் போற்றிலன் புகழினைப் போற்றிலன் பொலிமன் தன்னைப் போற்றிலன் தகவுறு ஞானமாம் வைவேல் மின்னைப் போற்கதிர் வீசுறக் கரத்தினில் விளங்கும் நின்னைப் போற்றினன் நின்னடி யடைந்தனன் நிமலா

இந்தப் பாடலும் கலித்துறையே.

இத்தகைய கலித்துறைகளைக் கலிநிலைத்துறை யென்றும் சொல்வதுண்டு. காப்பியக் கலித்துறை, கட்டளைக் கலித்துறையென்று வேறு இரண்டுவகைக் கலித்துறைகளும் இருத்தலின், இதனைத் தனியே தெரிந்து கொள்ளக் கலிநிலைத் துறையென்று வழங்குகிறார்கள்.

“வென்றான் வினையின் தொகையாயவிரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும் சென்றான் திகழும் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றான்அடிக்கீழ்ப்பணிந்தார்வினை நீங்கி நின்றார்.” இது காப்பியக் கலித்துறை. விருத்தக் கலித்துறை என்றும் இதைக் கூறுவதுண்டு. இந்தக் கலித்துறையில் ஒவ் வோரடியிலும் மூன்றாவது சீர் கனிச் சீராக வந்தது காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/195&oldid=655794" இலிருந்து மீள்விக்கப்பட்டது