பக்கம்:கவி பாடலாம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிப்பாவின் இனம் 195

யார்க்கும் எளியன் இனிதாகிய சொல்லன் என்றும் ஆர்க்கும் நலமே புரிகின்றவன் ஆழ்ந்த அன்பன் ஈர்க்கும் அழுக்கிற் செறியாதவன் ஏய்ந்த தூய்மை சேர்க்கும் செயலான் அவன் ஆண்டிடின்தேயம் ஓங்கும். இதுவும் காப்பியக் கலித்துறை.

கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது எழுத்துக்கணக்கை உடைய கலித்துறை என்னும் பொருளுடையது. கட்டளை என்பது கணக்கு. எழுத்துக் கணக்கையுடைய அடிகளைக் கட்டளையடிகள் என்று சொல்வது வழக்கம்.

கட்டளைக் கலித்துறை, அடிதோறும் ஐந்து சீர்களை உடையதாய், ஒவ்வோரடியும் தனித்தனியே வெண்டளை அமைய, ஈற்றுச் சீர் மட்டும் விளங்காய்ச் சீராகி, ஏகாரத்தில் முடியும். இடையில் விளங்காய்ச் சீர் வராது. இந்த இலக்கணம் அமைந்தால் ஒவ்வோரடியிலும் ஒற்றை விட்டு எண்ணிப் பார்த்தால் நேர்முதலாகிய அடியில் பதினாறு எழுத்துக்களும், நிரை முதலாகிய அடியில் பதினேழு எழுத்துக்களும் இருக்கும். இந்தக் கணக்குத் தவறவே தவறாது.

“வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்களின் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொலோசக மேழுமளித் துண்டானுறங்க ஒழித்தான்பித்தாகவுண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.” இந்தக் கட்டளைக் கலித்துறையில் ஒவ்வோரடியிலும் பதினாறே எழுத்துக்கள் வந்திருக்கின்றன. (1) வெண்டா-2, மரைக்கன்றி-4, நின்பதம்-3,

தாங்களன்-3, வெள்ளையுள்ளத்-4-16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/196&oldid=655795" இலிருந்து மீள்விக்கப்பட்டது