பக்கம்:கவி பாடலாம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கவி பாடலாம்

(2) தண்டா-2, மரைக்குத்-3, தகாதுகொ-4 லோசக-3,

மேழுமளித்-4-16.

(3) துண்டா-2, னுறங்க-3, ஒளித்தான்பித்-4, தாகவுண்-3,

டாக்கும் வண்ணம்-4-16

(4) கண்டான்-2, சுவை கொள்-3, கரும்பே-3, சகல-3,

கலாவல்லியே-5=16. இதில் மூன்றாம் அடியில் டாக்கும் வண்ணம் என்று தேமாந்தண்பூவும் நான்காம் அடியில் ‘கலா வல்லியே என்று புளிமாங்கனியும் வந்தாலும் இடையிலுள்ள ஒற்றை நீக்கிக் கூவிளங்காயாகவும் கருவிளங்காயாகவும் கொள்ள வேண்டும்.

“நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றி.டினே.” இதுவும் கட்டளைக் கலித்துறையே. இதில் அடிதோறும் வெண்டளை பிறழாது வந்திருக்கிறது. நிரை முதலாகிய கட்டளைக் கலித்துறையில், ஒரடியின் ஈற்றுச் சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை அமையாது. -

“விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை

குன்றா மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடிவேலுஞ்செங் கோடன் மயூரமுமே.” இந்தக் கந்தர் அலங்காரப் பாட்டில் ஒவ்வோரடியின் இறுதிச் சீரும் விளங்காயாக முடிகிறது. அடுத்த அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/197&oldid=655796" இலிருந்து மீள்விக்கப்பட்டது