பக்கம்:கவி பாடலாம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கவி பாடலாம்

கட்டளைக் கலிப்பா எட்டுச் சீர்களையுடைய அடிகள் நான்குடையதாக வரும். அரையடிக்கு, முதல் நேரசை யானால் எழுத்துப் பதி னொன்றும், நிரையசையானால் எழுத்துப் பன்னிரண்டும் இருக்க வேண்டும்.

வேதம் மேவிய தாமரை ஆகம

விரைப்பொழிற்படு தூமலர் மாலையாம் போதம் மேவிய நெஞ்ச மலரினில்

புக்குத் தேன்சொரி புத்தமு தக்குடம் நாத மேலுறு நுட்பம் சுடருரு

ஞான மேயுரு வாகிய சேமவைப் பாதி யந்தமி லாததோர் மெய்ந்நிரை

ஆறு மாமுகன் செங்கழற் பாதமே. இந்தக் கட்டளைக் கலிப்பாவில் முதலடியின் பின் பாதியை அன்றி மற்ற ஏழு அரையடிகளும் நேரசையை முதலில் உடையன. அவற்றில் உள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் பதினோரெழுத்துக்களே இருப்பதைக் காணலாம். அரையடியில் முதல் இரண்டு சீரினிடையே நேரொன்றாசிரியத் தளையும், அதன்பின் வெண்டளையும் அமைந்திருக்கின்றன. தளையையும் எழுத்துக் கணக்கையும் பார்த்துப் பார்த்துப் பாடத் தொடங்கினால் பாடவே முடியாது. பழைய கட்டளைக் கலிப்பாக்களைப் படித்துப் படித்துப் பார்த்து அவற்றின் ஒசையை நன்றாக மனத்தில் வாங்கிக் கொண்டு பாட வேண்டும். பாடின பிறகு பாட்டுப் பிழையில்லாமல் இருக்கிறதா என்று தளையையும் எழுத்துக் கணக்கையும் வைத்துப் பார்க்கலாம்.

கட்டளைக் கலிப்பா வீறுகொண்டு சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்ற உருவம். பாரதியார் பாடலில் மிடுக்கான இடங்களில் கட்டளைக் கலிப்பாவை ஆண்டிருக்கிறார். புதுமைப் பெண், சுயசரிதை, பராசக்தி முதலியவற்றில் இந்தப் பாவைப் பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/199&oldid=655798" இலிருந்து மீள்விக்கப்பட்டது