பக்கம்:கவி பாடலாம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுகை 19

வழக்கம். இரண்டாம் எழுத்துக்குப் பின்னும் சில எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தால் ஒசை நயமாக இருக்கும். கடைசிப் பட்சமாக இரண்டாம் எழுத்தாவது ஒன்றாக இருக்க வேண்டும்.

கந்தன் திருவடி

நந்தந் தலைமிசை

வந்தன் புடனுறின்

பந்தங் கழியுமே.

இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியின் ஆரம்பத்திலும்

இரண்டு, மூன்றாவது எழுத்துக்களாக ந்த என்பவை உள்ளன. கண்ணன், வண்ணன், அண்ணன், திண்ணன் என்று நான்கு அடியிலும் முதலில் சொற்கள் வந்தனவென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று எழுத்துக்கள் ஒரே மாதிரி வரும்.

‘உலகம் யாவையும் தாமுள வாக்கலு

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.”

இந்தக் கம்பராமாயணப் பாட்டிலே ல, லை என்ற இரண்டும் எதுகையாக வந்திருக்கின்றன. இப்படியே ல, லி, லு, லெ, லொ ஆகிய எழுத்துக்களும் வரலாம். குறிலாக இருந்தால் சிறப்பு. லை என்பது நெடிலானாலும் லய் என்பது போல ஒலிப்பதால் அதுவும் குறிலைப் போலவே அமையும்.

இரண்டாவது எழுத்து ஒன்றாக இருப்பதோடு முதல் எழுத்துப் பற்றியும் ஒன்றை அவசியமாகக் கவனிக்க வேண்டும். பலர் இதனைக் கவனிக்காமல் பிழை செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/20&oldid=655799" இலிருந்து மீள்விக்கப்பட்டது