பக்கம்:கவி பாடலாம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிப்பாவின் இனம் 199

கலி விருத்தம்

கலிவிருத்தம் என்பது நான்கு சீர்களையுடைய அளவடி நான்கினால் அளவொத்து அமைவது. அதன் வகைகளைப் பற்றி முதல் பாகத்திலேயே பார்த்தோம்.

“வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் ஆய்தலி னொண்சுடராழியி னான்றமர் வாய்தலி னின்றன்ர் வந்தென மன்னர்முன் நீதலை நின்றுரை நீள்கடை காப்போய்.” இது ஒருவகைக் கலி விருத்தம்.

‘ஆடும் பரிவே லணிசே வலெனப்

பாடும் பணியே பணியா யருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியா னைசகோதரனே.”

இது மற்றொரு வகைக் கலிவிருத்தம்.

‘உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.” இது பின்னும் ஒருவகைக் கலிவிருத்தம். இது கட்டளைக் கலிப்பாவைப் போன்ற ஓசையுடையதாய், அதில் வரும் அரையடியையே முழு அடியாகப் பெற்றதாய் இருக்கிறது. இந்த விருத்தத்தில் அடிக்குப் பன்னிரண்டும் பதினொன்றுமாக எழுத்துக்கள் அமையும்.

நான்கு சீர்களால் அளவொத்து வந்த கலிவிருத்தங்கள் புலவர்களின் ஆற்றலுக்கு ஏற்றபடி பலபல வகை களாக விரிந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/200&oldid=655800" இலிருந்து மீள்விக்கப்பட்டது