பக்கம்:கவி பாடலாம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 கவி பாடலாம்

“திரைத்த சாலிகை

நிரைத்த போனிரைந் திரைப்ப தேன்களே விரைக்கொள் மாலையாய்.”

இதுவும் வஞ்சித்துறையே.

வஞ்சி விருத்தம்: மூன்று சீர்களையுடைய அடியாகிய சிந்தடி நான்கினால் வரும்.

வண்ணங் கண்டு மகிழ்ந்தனன் எண்ணங் கொண்டே இறைஞ்சினள் திண்ணங் கொண்டு சிறந்தனள் நண்ணும் கந்த நலங்கொடாய். இது மூன்று சீரடிகள் நான்கால் வந்த வஞ்சி விருத்தம்.

“சேலை யார்ந்த சுரத்திடைக்

காலை யார்கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல உண்கண் இவள்வாழும்.”

இதுவும் வஞ்சி விருத்தம்.

‘இருது வேற்றுமை யின்மையால்

சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய்.”

இதுவும் வஞ்சி விருத்தமே. முன்பே வஞ்சி விருத்தங்களின் இலக்கணத்தையும்

உதாரணங்களையும் பார்த்தோம். அவற்றையும் பார்த்துக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/205&oldid=655805" இலிருந்து மீள்விக்கப்பட்டது