பக்கம்:கவி பாடலாம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கவி பாடலாம்

முதல் தான்கு அடிகள் வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடிகள் ஆசிரியப்பா அடிகளாகவும் வந்தன.

“தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை

முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளுர்க் குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப வென்றும் தீரா நண்பிற்றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே.”

இதில் முன் மூன்றடி வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடி ஆசிரியப்பா அடிகளாகவும் வந்தன. சிவ பெருமான் காக்க நீ வாழ்க’ என்ற பொருளுடைமையால் இதுவும் புறநிலை வாழ்த்தாயிற்று.

கைக்கிளை மருட்பா, கைக்கிளை என்னும் ஒரு தலைக்காமத்தைப் பற்றி வருவது. ஆண், பெண் என்னும் இருவருள் யாரேனும் ஒருவர் மட்டும் மற்றவரைக் காமுறுவது ஒருதலைக் காமம் அல்லது கைக்கிளை. அகப்பொருள் நூல்களில் இதை ஒரு திணையாகக் கூறியிருக்கிறார்கள். ஒருவன் ஒருத்தியைக் கண்டு அவள் விரும்பாமலே தான் விரும்பிய நிலையில் கூறுவதும், அப்படியே ஒருத்தி ஒருவனைக் கண்டு காமுற்றுக் கூறுவதும் கைக்கிளையில் அடங்கும். முன்னே சொன்னது ஆண்பாற் கைக்கிளை என்றும், பின்னே சொன்னது பெண்பாற்

கைக்கிளை யென்றும் பெயர் பெறும். இந்த ஒருதலைக்

காமம் பற்றி வரும் மருட்பா, கைக்கிளை மருட்பா.

“திருதுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும்

இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும் ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/207&oldid=655807" இலிருந்து மீள்விக்கப்பட்டது