பக்கம்:கவி பாடலாம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சிப்பாவும் இனமும் 2O7

இது ஒரு பெண்ணைக் கண்டு, இவள் மானிட மகளோ, தெய்வப் பெண்ணோ என்று ஐயுற்ற ஆடவன் ஒருவன் பிறகு இன்ன இன்ன காரணத்தால் இவள் நிலவுலகில் உள்ள பெண்தான் என்று தெளிந்து கூறியது. அவன் அவளிடம் விருப்பம் கொண்டவன். ஆனால் அவள் அவனை இன்னும் காணவில்லை; விரும்பவில்லை. ஆதலின் இது ஒரு பக்கம் மட்டும் காமம் உண்டான நிலை; ஒரு தலைக் காமமாகிய கைக்கிளை. பாட்டில் முன் இரண்டடி வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடி ஆசிரியப்பா அடிகளாகவும் இருத்தலின் இது மருட்பா.

வாயுறை வாழ்த்து மருட்பா உண்மையைச் சொல்வது. கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை வற்புறுத்திச் சொல்வது இது.

“பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்

சொலல்முறைக்கண் தோன்றிச் சுடர்மணித்தேர் ஊர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும் சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறா னாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா அனைத்தாதல் நீவிரும் காண்டிர் நினைத்தக்க கூறிய வெம்மொழி பிறழாது - தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே.” ‘கூற்றுவனை விலக்கலாகாது’ என்ற உண்மையைச் சொன்னமையால் வாயுறை வாழ்த்தாயிற்று. இதில் இறுதி இரண்டடிகள் ஆசிரிய அடிகள்; மற்றவை வெண்பா அடிகளாக நின்று மருட்பா ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/208&oldid=655809" இலிருந்து மீள்விக்கப்பட்டது