பக்கம்:கவி பாடலாம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கவி பாடலாம்

செவியறிவுறுநூஉ மருட்பா, இன்னபடி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துதலைக் கூறுவது.

“பல்யானை மன்னர் முருங்க அமருழந்து

கொல்யானைத் தேரொடும் கோட்டந்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக அடுதிறல் ஆளி நிமிர்தோட் பெருவழுதி எஞ்ஞான்றும் ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல் மழவர் இழைக்கும் வரைக்காண் நிதியீட்டம் காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல் அமைத்த அரும்பொருள் ஆறன்றி வெளவல் இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று மன்ற மறுக அகழாதி என்றும் மறப்புற மாக மதுரையார் ஒம்பும் அறப்புறம் ஆசைப்பட்டேற்க அறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிதையாதி ஒட்டார் செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் கவியுடைத்தாய்க் கற்றாற் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுதிச் - செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதிநீ சுற்றம் அறிந்த அறிவினாய் மற்றும் இவையிவை வீயா தொழுகின் நிலையாப் பொருகட லாடை நிலமகள்

ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே.” இது, இன்னது செய்யாதே, இன்னது செய்க என்று

அறிவுறுத்தி வந்தமையால் செவியறிவுறுஉ மருட்பா வாயிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/209&oldid=655810" இலிருந்து மீள்விக்கப்பட்டது