பக்கம்:கவி பாடலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கவி பாடலாம்

பட்டு என்பதற்குக் கட்டு, குட்டு, கிட்டு, பிட்டு

என்பவை எதுகையாக வரும். ஆனால் பாட்டு என்பது எதுகை ஆகாது. பாட்டு என்பதற்குக் காட்டு, நீட்டு, ஊட்டு என்பவை எதுகையாக வருமேயன்றிக் கட்டு, தட்டு என்பவை வருவதில்லை. முதலெழுத்துக் குறிலாக இருந்தால் எதுகையாக வருவதிலும் முதலெழுத்துக் குறிலாக இருக்க வேண்டும். அப்படியே நெட்டெழுத்தை முதலாக உடைய சொல்லுக்கு நெட்டெழுத்தை முதலாக உடைய சொல்லே எதுகையாக வரும்.

காட்டினிற் குமுறும் கூகை கவின்பெறக் கூட்டி லுய்த்து வீட்டினிற் பயிலும் கிள்ளை,

இந்த இரண்டடிகளிலும் காட்டினிற், வீட்டினிற் என்று எதுகையாக அமைந்த சொற்களில் முதல் எழுத்தாக

உள்ளவை இரண்டும் நெட்டெழுத்தாக இருப்பதைக் காண்க.

பாம்பினைக் கண்ட போது பயத்தினால் நடுங்கும் பேதை கம்பினை எடுப்பானோசொல்

கடுகியே ஒடு வானே.

என்று பாடி ம்பினை என்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றி இருப்பதனால் எதுகை அமைந்துவிட்டதாக எண்ணக் கூடாது. பா-என்ற நெட்டெழுத்தை முதலாக உடைய சொல்லுக்குக் க-என்ற குற்றெழுத்தை முதலாக உடைய சொல் எதுகையாக வராது. ‘காம்பினை எடுப்பா

னோசொல் என்று திருத்தினால் எதுகை அமைந்து விடும். (காம்பு-மூங்கில்.) - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/21&oldid=655811" இலிருந்து மீள்விக்கப்பட்டது